காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்புக்கு தடை


காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்புக்கு தடை
x

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் வந்தன. தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார். படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். இதற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்று முகாமிட்டனர். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்புக்கு அதிகாரிகள் திடீரென்று தடை விதித்து உள்ளனர். டெல்லியில் வருகிற செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அரசு நிகழ்ச்சிகள் காஷ்மீரில் நடந்து வருகின்றன. எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு திரும்பி உள்ளனர்.


Next Story