நீண்ட முடி, தாடியுடன் வைரலாகும் தனுசின் தோற்றம்


நீண்ட முடி, தாடியுடன் வைரலாகும் தனுசின் தோற்றம்
x

தனுஷ் மும்பைக்கு நீண்ட தாடி, மீசை, தலைமுடி, கூலிங் கிளாஸ் சகிதம் வித்தியாசமான தோற்றத்தில் சென்றுள்ளார். ஏற்கனவே அந்த்ராங்கி ரே, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளதால் இந்தி ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு விமான நிலையத்தில் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

அவரது புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் வியந்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இந்தி ரசிகர்கள் பாபா ராம்தேவ் போன்று இருக்கிறார். அவரது வாழ்க்கை கதையில் நடிக்க போகிறாரா என்று கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கான தோற்றம்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு வெடிச்சத்தங்களுடன் வனப்பகுதிகளில் நடந்ததால் விலங்குகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படப்பிடிப்புக்கு தடையும் விதித்தனர்.

தற்போது வேறுபகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.


Next Story