ரஜினிகாந்தின் புதிய 'லுக்'குக்கு வரவேற்பு


ரஜினிகாந்தின் புதிய லுக்குக்கு வரவேற்பு
x

தொப்பி அணிந்தபடி காட்சியளித்த ரஜினிகாந்தின் புதிய ‘லுக்'கை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'ஜெய் பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார்.

இதில் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தை காண ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் திரண்டுள்ளனர். ரசிகர்கள் கூட்டத்தை பார்த்த ரஜினிகாந்த் காரில் இருந்து நின்றபடியே அவர்களை நோக்கி கையசைத்து, ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

தொப்பி அணிந்தபடி காட்சியளித்த ரஜினிகாந்தின் புதிய 'லுக்'கை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

1 More update

Next Story