உணவு

எடையைக் குறைக்க உதவும் ‘வீகன்' உணவு முறை + "||" + Helps to reduce weight ‘Vegan’ diet

எடையைக் குறைக்க உதவும் ‘வீகன்' உணவு முறை

எடையைக் குறைக்க உதவும் ‘வீகன்' உணவு முறை
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
டல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்காகவே பல விதமான உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ‘வீகன்' உணவு முறையும் ஒன்று.

 ‘வீகன்' என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றது போல அமையும்.

வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கிறது.

இந்த உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களைக் கூட தவிர்த்து விடுவார்கள். பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள்.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையைக் குறைக்க  வேண்டும்? என்ன காரணத்தினால் எடை அதிகமாகி இருக்கிறது? ஏதேனும் உடல் நல குறைபாடு இருக்கிறதா? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள்,  சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது.

சாப்பிடும் உணவில் ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவை உடல் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமானதாகும்.

வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். அப்போது தான் உடல் எடை எளிதாக குறையும். மேலும், அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சோடா போன்றவற்றை தவிர்க்க 
வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்