எடையைக் குறைக்க உதவும் ‘சைவ உணவு முறை’
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதற்கு, தினசரி உணவில் முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சைவ உணவு முறை சிறந்தது. இதில் பழங்கள், காய்கறிகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி, தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தங்கள் ஊட்டச்சத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பலவகையான உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.
இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்க்கும் சைவ உணவு முறையில் முட்டை, பால் மற்றும் தேன் போன்ற உணவுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
‘சைவ உணவு முறை’ உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தைப் பாதுகாக்கும், சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதில்லை.
இந்த உணவு முறையை பின்பற்றுவதன் மூலம், அதிக அளவில் நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட், பொட்டாசியம், மக்னீசியம், போலேட், வைட்டமின் சி, ஏ, ஈ கிடைக்கிறது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதற்கு, தினசரி உணவில் முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளன. தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை உணவில் சேர்த்து வருவதால் உடல் எடை குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் முக்கிய இடம் பிடிக்கிறது. எனவே சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் இயற்கை தானியங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது, பெருங்குடல் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கை உணவு சாப்பிடுவது ரத்த நாளங்களைக் காப்பதுடன், அவற்றில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.
இதில் முட்டை போன்ற உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் போதுமான அளவு கிடைக்கிறது. இம்முறைகளைப் பின்பற்றினால் எளிதாக எடையைக் குறைக்கலாம்.
Related Tags :
Next Story