உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும் சரிவிகித உணவு முறை


உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும் சரிவிகித உணவு முறை
x
தினத்தந்தி 18 April 2022 11:36 AM IST (Updated: 18 April 2022 11:36 AM IST)
t-max-icont-min-icon

உடல் எடையைக் குறைப்பதற்காக பலர், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கிறார்கள். இது தவறான செயல்பாடாகும்.

டல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்கள் என அனைத்து சத்துக்களும் அவசியம். உடல் இயக்கத்துக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும், சீரான விகிதங்களில் கலந்து இருக்கும் உணவே ‘சரிவிகித உணவு’ எனப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைவான, ஒரே மாதிரியான உணவுமுறை, உடல் ஆரோக்கியத்தை பாதித்து சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு காரணமாகிறது. இதனால் உடல் சோர்வு, செய்யும் வேலையில் ஈடுபாடு குறைவு போன்ற வாழ்வியல் பிரச்சினைகளும் ஏற்படும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக பலர், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கிறார்கள். இது தவறான செயல்பாடாகும்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் அனைத்து வகையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக அடர் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை இவ்வகை உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது.

முழு தானிய வகைகளை, அன்றாடம் உட்கொள்ளும் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ரொட்டி மற்றும் சாதம் வடிவில் சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதுடன், உணவை 
எளிதில் செரிக்கச் செய்து உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நெய் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்யின் அளவை குறைவாக பயன்படுத்துவது உடல் எடையைக் குறைப்பதுடன், ஆரோக்கியத்துக்கும் உதவும். குறைந்த அளவிலான கொழுப்பு, உடலில் கழிவுகள் படிவதைத் தடுக்கும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை சரியான அளவில், சரியான நேரத்தில் சாப்பிடுவது உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வழிவகுக்கும்.

முட்டை, நாட்டுக்கோழி, ஆடு, மீன், இறால், நண்டு போன்ற இறைச்சி வகைகளை எண்ணெய்யில் பொறிக்காமல், வேகவைத்த வடிவில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் சீரான எடையை பராமரிக்க முடியும்.

வேர்க்கடலை, சுண்டல், பாதாம், தானியங்கள், பருப்புகள், நட்ஸ் வகை உணவுகளை காலை மற்றும் மாலை உணவு இடைவேளை நேரங்களில் சாப்பிடலாம். இவை உடலுக்கு உடனடி ஆற்றல் தருவதுடன், உடலில் நல்ல கொழுப்பு சேர உதவும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஒரு கையளவு நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிடுவது, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும். 

Next Story