பொழுதுபோக்கு

நடிப்பால் ஈர்க்கும் வெண்பா + "||" + elegant actress venba

நடிப்பால் ஈர்க்கும் வெண்பா

நடிப்பால் ஈர்க்கும் வெண்பா
மேற்கத்திய நடனம் நன்றாக ஆடுவேன். பரதமும் கற்றிருக்கிறேன். நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக அவதாரமெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பவர் வெண்பா. இனி அவருடன் பேசலாம்.

உங்களைப் பற்றி?
நான் சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண். பெற்றோர் வைத்த பெயரை மாற்றி, சினிமாவுக்காக ‘வெண்பா’ என வைத்துக் கொண்டேன். நடித்துக் கொண்டே சட்டப்படிப்பைத் தொடர்கிறேன். என்னுடைய அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை நந்தினி பேஷன் டிஸைனிங் படிக்கிறார்.

நடிப்புத் துறைக்கு வந்தது எப்படி?
மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்து வெளிவந்த முதல்படம் ‘சிதம்பரத்தில் அப்பாசாமி.' அதில் கதை நாயகனின் மூத்த பெண்ணாக நடித்தேன். அடுத்ததாக ‘சிவகாசி', ‘கற்றது தமிழ்', ‘கருப்பசாமி குத்தகைதாரர்' படங்களில் கதாநாயகிகளின் சிறுவயது பாத்திரங்களில் நடித்தேன்.

இடைப்பட்ட காலத்தில் தனியார் தொலைக்காட்சியில் ‘ஓடிவிளையாடு பாப்பா' என்ற நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன்.

கதாநாயகியானது எப்போது?
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ‘காதல் கசக்குதய்யா' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தேன். பின்பு ‘பள்ளிப் பருவத்திலே', ‘மாயநதி', ‘ஆனந்தம் விளையாடும் வீடு', ‘ஆயிரம் ஜென்மங்கள்' போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன்.

நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்?
நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன்.

முதல் சம்பளத்தை எப்படிச் செலவழித்தீர்கள்?
குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது கிடைத்த சிறு தொகையைக் குடும்பத்தின் செலவுக்குப் பயன்படுத்தியதாக நினைவிருக்கிறது. கதாநாயகியான பின்பு கிடைத்த சம்பளத்தில் இருந்து அம்மாவுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தேன். அது இப்போதும் இருக்கிறது.

யாருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
ரஜினி, கமல் இருவருடனும் நடிக்க வேண்டும்.

தனிப்பட்ட பயிற்சிகள் எடுத்திருக்கிறீர்களா?
நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். மேற்கத்திய நடனம் நன்றாக ஆடுவேன். பரதமும் கற்றிருக்கிறேன். நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

உங்களுக்கு பிடித்த உணவுகள் என்ன?
நான் அசைவ உணவுப் பிரியை. சிக்கன், மட்டன், மீன், நண்டு, இறால் என எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுவேன். ஓரளவுக்கு சமைக்கவும் செய்வேன். 

தொடர்புடைய செய்திகள்

1. மாதவிடாய் வலியைக் குறைக்கும் சுப்த பத்தகோனாசனம்
வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.
2. மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்
கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.
3. ஓரிகாமி நகைகள்
ஓரிகாமி நகைகள் ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
4. நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..
நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
5. பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி
ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.