படிப்பும், நடிப்பும் இரு கண்கள் - ஷார்மிஷா


படிப்பும், நடிப்பும் இரு கண்கள் - ஷார்மிஷா
x
தினத்தந்தி 17 Jan 2022 5:30 AM GMT (Updated: 15 Jan 2022 10:54 AM GMT)

நான் நன்றாகப் பாடுவேன், நடனம் ஆடுவேன், ஓவியம் வரைவேன். விளையாட்டுத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன்.

ப்போதும் கலகலப்பு, உற்சாகம் என்று இருக்கும் சாக்லேட் பேபி ஷார்மிஷா, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மனங்களிலும் மகிழ்ச்சியைக் கடத்தி விடுகிறார்.

இலங்கையில் இருந்து 8 மாதக் குழந்தையாக தமிழகம் வந்த சார்மிஷாவுக்கு, இப்போது 20 வயது ஆகிறது. இலங்கைத் தமிழின் சாயலே தெரியாமல்  பேசுகிறார்..

“நான், தற்போது இளங்கலை கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது தாய் விஜயலட்சுமி திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகையும் ஆவார். தந்தை தர்மலிங்கம் தொழிலதிபர். நான் கல்லூரியில் படித்துக்கொண்டே, வெப் சீரீஸ் மற்றும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். நன்றாகப் பாடுவேன், நடனம் ஆடுவேன், ஓவியம் வரைவேன். விளையாட்டுத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன்.

நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
நடிப்புத் துறையில் எனக்கு ஈடுபாடு வந்ததற்குக் காரணம் எனது அம்மா தான். அவர்  நடிப்பதைப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும், எனது ஆசையை அம்மாவிடம் வெளிப்படுத்தினேன். அவரும் அதற்கு சம்மதித்து என்னை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

இதுவரை என்னென்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
எனது முதல் படத்திலேயே பாரம்பரியமிக்க பெரும் நிறுவனத்தின் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். விரைவில் அந்தப் படம் வெளிவர இருக்கிறது. பின்பு சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்' படத்தில், கதாநாயகிக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ இணையத் தொடரில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறேன். இந்தத் தொடரில் நடித்தது மிக நல்ல அனுபவத்தைத் தந்தது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி?
நடிகர் சூர்யாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதில் எனக்கு நல்ல பாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநரை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

கல்லூரி மாணவி ஷார்மிஷாவைப் பற்றிச் சொல்லுங்கள்?
என்னுடைய கல்லூரி நாட்களை எனது தோழிகள், ஆசிரியர்களுடன் இனிமையாகக் கழித்து வருகிறேன். நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்புக்கும் கொடுக்கிறேன். படிப்பும், நடிப்பும் எனது இரு கண்கள் போன்றவை.

நீங்கள் கைபேசி வைத்திருப்பதில்லை, இது எப்படி சாத்தியம் ஆகிறது?
எனது இலக்குகளை அடைவதற்கான பயணத்தில், கைபேசியில் கவனம் செலுத்தத் தொடங்கினால்... எளிதாகக் கவனச்சிதறல் ஏற்படும். அதனால் எனக்கென்று தனி கைபேசியை வைத்துக்கொள்ளவில்லை.

உங்கள் லட்சியம் என்ன?
எனது முதல் லட்சியம் திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகி ஆவது. இரண்டாவது வழக்கறிஞராகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது ஆகும்.

Next Story