உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை


உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2017 10:30 PM GMT (Updated: 12 Aug 2017 7:13 PM GMT)

மதுரவாயல்–தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் அருகே சாலையோரம் உள்ள முட்புதரில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதையடுத்து லாரி டிரைவர்கள் அங்கு சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பூந்தமல்லி,

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை முட்புதரில் வீசி சென்றனரா? அல்லது அவரே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story