வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பறிமுதல், 2 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பறிமுதல், 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2017 4:00 AM IST (Updated: 2 Nov 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே உள்ள கொடிபங்கு கிராமத்தை சேர்ந்த காசிநாதன் வீட்டில் தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வனஉயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

தொண்டி,

தொண்டி அருகே உள்ள கொடிபங்கு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய வீட்டில் தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வனஉயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரதீப், விருதுநகர் வனபாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 கிலோ கடல்குதிரைகள், 4 கிலோ கடல் பல்லி, 17 கிலோ கடல் அட்டைகள், 15 கிலோ அரியவகை உரியினங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அவர்கள், பறிமுதல் செய்து கொடிபங்கு கிராமத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து ராமநாதபுரம் வனஉயிரின சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 அதன்பேரில் வனவர் மதியழகன், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.


Next Story