வருமான வரி சோதனை: தமிழகத்தில் அச்சத்தை உருவாக்கி உள்ளது வைகோ பேட்டி
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவனியாபுரம்,
தமிழகத்தில் பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. குறிப்பாக தலைமை செயலாளர், அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. தற்போது அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்ததால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இது தமிழகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதற்கு நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story