காங்கிரஸ் ஆட்சியால் கர்நாடகம் நாசமாகி விட்டது அமித்ஷா குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியால் கர்நாடகம் நாசமாகிவிட்டது என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் முதல் நாளில் பெங்களூருவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமித்ஷா வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் சமூக வலைதளங்களில் இன்னும் வேகமாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டம் தேவனஹள்ளியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி உதவியை வழங்கியது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.89 ஆயிரம் கோடி மட்டுமே கர்நாடகத்திற்கு வழங்கியது. மத்திய அரசு வழங்கிய நிதி காங்கிரஸ் தலைவர்களின் பாக்கெட்டுக்கு சென்றுவிட்டது.
மத்திய அரசு, தூய்மை பாரதம், முத்ரா, ஜன்தன் உள்பட 116 திட்டங்களை அமல்படுத்தியது. இந்த திட்டங்களை சித்தராமையா அரசு மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியால் கர்நாடகம் நாசமாகிவிட்டது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள், குப்பை பிரச்சினைகள் நகரில் தாண்டவமாடுகிறது.
காங்கிரசாருக்கு ‘கமிஷன்‘ செல்லாத இடங்களில் திட்டங்கள் முடங்கியுள்ளன. ‘கமிஷன்‘ கொடுக்காவிட்டால் எந்த பணியும் நடப்பது இல்லை. தென்இந்தியாவில் பா.ஜனதாவுக்கு நுழைவு வாயிலாக கர்நாடகம் உள்ளது. அதனால் கர்நாடகத்தில் வெற்றி பெறுவது நமக்கு மிக முக்கியம் ஆகும். மத்திய அரசு தீட்டும் திட்டங்கள் கர்நாடகத்திற்கு முழுஅளவில் வந்து சேர வேண்டுமென்றால் இங்கு பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.
மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் தோழனாக, மக்களின் தோழனாக செயலாற்றி வருகிறது. ஆனால் சித்தராமையா அரசு, மாநிலத்தில் கொலைகள் நடைபெறும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. ஊழல் புகார்கள் உள்ள மந்திரிகள் டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ணப்பா ஆகியோர் மீது சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 9 அம்ச திட்டத்தை கூறியுள்ளேன். இதை பூத் கமிட்டி மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் செய்ய வேண்டும். தேர்தல் முடியும் வரை நமது கட்சி நிர்வாகிகள் பகல்-இரவாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Related Tags :
Next Story