மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக விசைப்படகுகள் கட்டுமான பணி தொடக்கம்
நாகையில், மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக விசைப்படகுகள் கட்டுமான பணி தொடங்கப்பட்டன.
நாகப்பட்டினம்,
ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு தமிழக அரசு 70 சதவீத மானியத்தில் விசைப் படகு வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகையில் மீனவர்களுக்கு 70 சதவீத மானியத்தில் விசைப்படகுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விசைப்படகுகள் கட்டுமானப்பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நாகை நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு அருகே நடைபெற்றது. இதில் நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி கலந்து கொண்டு கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் முதற்கட்டமாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு மானிய விலை விசைப்படகு கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நம்பியார்நகர் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story