மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Mother and son was dead in locked house near Vaniyambadi: murder? police investigation

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை

வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணம்: கொலையா? போலீஸ் விசாரணை
வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய் - மகன் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளகுட்டை - பூவாங்கமரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி காத்தாய் அம்மாள் (வயது 80). இவர்களது மகன் பிரகாசம் (60). தாயும், மகனும் ஒரே வீட்டில் தனித்தனி பகுதியில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்களது வீடு வெளிப்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் தரையில் காத்தாய் அம்மாளும், பிரகாசம் தூக்குப்போட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காத்தாய் அம்மாளை அவரது மகன் பிரகாசம் கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரும் கெலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிவண்டியில் தீயில் உடல் கருகிய தாய், மகள் பரிதாப சாவு கணவரை பயமுறுத்த மண்எண்ணையை உடலில் ஊற்றிய போது விபரீதம்
கணவரை பயமுறுத்த உடலில் மண்எண்ணையை ஊற்றிய போது தீப்பிடித்த சம்பவத்தில் உடல் கருகிய தாய், 2 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
2. குடும்ப தகராறில் 3 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற கொடூர தாய் போலீசார் கைது செய்தனர்
சீர்காழி அருகே குடும்ப தகராறில் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தனது 3 மாத குழந்தையை தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
3. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது
குரூப்-4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேனியை சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்து உள்ளது.
4. சென்னை வளசரவாக்கத்தில் மகன், மகளை கொன்று இளம்பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகன் மற்றும் மகளை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. வாணியம்பாடியில் 1½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை? - தாய், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை
வாணியம்பாடியில் 1½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை