கடைகளில் அதிகாரிகள் சோதனை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.
பெருந்துறை அருகே திங்களூரில் உள்ள கடைகளில் பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ஜோதிலிங்கம் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
இதில் மளிகை கடைகள், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்கள், டீ கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் என மொத்தம் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் ஊழியர்கள் கொடுமுடி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story