குடிபோதையில் மனைவி எரித்து கொலை - கணவர் கைது


குடிபோதையில் மனைவி எரித்து கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2021 12:43 AM IST (Updated: 14 Feb 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே குடிபோதையில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுனையங்காட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கூலி தொழிலாளியான இவருக்கும், கும்மளாங்குண்டு மாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த அமிர்தவல்லி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் வேலைக்கு செல்வதில்லையாம். நேற்று முன்தினம் இரவு சேகர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, அமிர்தவல்லி, வேலைக்கு செல்லாமல் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அமிர்தவல்லி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதை தொடர்ந்து வேதனையால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமிர்தவல்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்.

Next Story