டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து


டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
x

கோப்புப்படம்

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் பீகாரில் நேற்று தடம் புரண்டன.

பாட்னா,

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் பீகாரில் நேற்று தடம் புரண்டன. மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கிழக்கு மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வீரேந்திர குமார் கூறும்போது, கடிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸின் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் ஹரிநகர் ஸ்டேஷன் அருகே வந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளின் பயணத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவின் மற்ற பாதைகள் வழியாக ரெயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

1 More update

Next Story