போலீஸ் அதிகாரி இட மாற்றத்துக்கு ரூ.10 லட்சம் லஞ்சம்: டெல்லியில் 2 பேர் கைது


போலீஸ் அதிகாரி இட மாற்றத்துக்கு ரூ.10 லட்சம் லஞ்சம்: டெல்லியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2017 10:45 PM GMT (Updated: 10 Aug 2017 9:10 PM GMT)

டெல்லி ஆர்.கே. புரத்தில் அரசு அதிகாரி காமேஷ்வர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர், ராஜன்குமார்.

புதுடெல்லி,

டெல்லியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், பனய் சிங் மீனா.

டெல்லி ஆர்.கே. புரத்தில் அரசு அதிகாரி காமேஷ்வர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர், ராஜன்குமார். இவர் தன்னை ஒரு அரசு அதிகாரி என்று கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பனய் சிங் மீனா, தான் விரும்பிய ஒரு இடத்துக்கு இடமாற்றம் பெற்றுத்தருவதற்காக ராஜன்குமாரிடமும், அருண் திவாரி என்பவரிடமும் ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.

அதன்பேரில் ராஜன்குமார், அருண் திவாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பனய்சிங் மீனா, காமேஷ்வர் ஆகிய 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

ராஜன்குமார், அருண் திவாரி ஆகிய 2 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது. ராஜன் குமாரிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.7 லட்சமும், அருண் திவாரியிடம் இருந்து ரூ.3 லட்சமும் கைப்பற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து ராஜன் குமாருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதில், அங்கிருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் பணமும், ரப்பர் ஸ்டாம்புகளும், போலி லெட்டர் பேடுகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த தகவல்களை டெல்லியில் சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர் வெளியிட்டார்.


Next Story