புதிய செல்போன் இணைப்பு: ஆதாரை பயன்படுத்தக் கூடாது - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


புதிய செல்போன் இணைப்பு: ஆதாரை பயன்படுத்தக் கூடாது - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 27 Oct 2018 12:01 AM IST (Updated: 27 Oct 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

புதிய செல்போன் இணைப்பு வழங்க ஆதாரை பயன்படுத்தக் கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆதார் தொடர்பான வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், செல்போன் இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் அல்ல என்று உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், ‘‘புதிதாக செல்போன் இணைப்பு (சிம்கார்டு) வழங்குவதற்கோ, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை ‘பயோமெட்ரிக்’ முறையில் சரிபார்ப்பதற்கோ ஆதாரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதாக நவம்பர் 5-ந் தேதிக்குள் உறுதி அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், தாங்களாக ஆதார் அட்டை நகலை அளித்தால் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story