பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள், ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு


பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள், ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 2019-02-21T03:06:19+05:30)

பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள், ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்தனர்.

புதுடெல்லி,

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா மற்றும் அமெரிக்காவுக்கான தூதர் ஹர்ஸ்வர்தன் சிரிங்லா ஆகியோரை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது.

அதன்படி நாடு திரும்பிய அவர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர்கள் இருவரும் நேற்று சந்தித்தனர்.

வழக்கத்துக்கு மாறான முறையில் நடந்த இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் புலவாமா தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story