திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் - தேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில் நடவடிக்கை


திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் - தேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 July 2019 9:30 PM GMT (Updated: 18 July 2019 9:17 PM GMT)

தேசிய கட்சி அந்தஸ்து விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு நாடாளுமன்ற தேர்தலில் அல்லது சட்டசபை தேர்தலில் ஒரு கட்சி, 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். மொத்த நாடாளுமன்ற இடங்களில் 2 சதவீதத்தை கொண்டிருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 3 மாநிலங்களிலாவது அந்த கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்க வேண்டும்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த தகுதிகளை கொண்டிருக்காத நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தேசிய கட்சி தகுதியை இழக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.

இந்த கட்சிகளின் தேசிய அந்தஸ்தை பறிப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.

அந்த கட்சிகளின் தேசிய அந்தஸ்தை ஏன் பறிக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு அந்தக் கட்சிகள் அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story