மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரின் கடிதத்துக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி


மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரின் கடிதத்துக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 9:24 PM GMT)

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரின் கடிதத்துக்கு பிரதமர் மோடி பதில் அனுப்பினார்.

தார்,

ஏழை மக்களும் உயர்தர மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறும் பொருட்டு மத்திய அரசு ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகளை இலவசமாக பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தை சேர்ந்த மகிமராம் பதிதார் (வயது 54) என்பவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதில் அனைத்து சிகிச்சையும் அவருக்கு இலவசமாக கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த அவர், இந்த திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றி கடிதம் எழுதினார்.

பின்னர் அவரே எதிர்பாராத நிலையில் இந்த கடிதத்துக்கு பிரதமரிடம் இருந்து பதில் வந்தது. அதில், ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்ததற்காக மகிமராம் பதிதாருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்து இருந்தார். இலவச சிகிச்சை மற்றும் பிரதமரின் பதில் கடிதம் ஆகியவற்றால் மகிமராம் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளார்.

Next Story