‘வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும்’ - மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம்


‘வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும்’ - மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம்
x
தினத்தந்தி 18 Aug 2019 9:54 PM GMT (Updated: 2019-08-19T03:24:54+05:30)

வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது. இதைத் தடுத்து, வாக்காளர் பட்டியலை சீர் செய்வதற்கு வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. ஆனால் இதற்கு தேர்தல் கமிஷனுக்கு தற்போது அதிகாரம் இல்லை. இந்த நிலையில், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அதில், “வாக்காளர்கள் ஆவதற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களிடமும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பு, வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதற்கு தடையாக அமைந்து விட்டது. இந்த நிலையில்தான் வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப் பெறுகிற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தவேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story