காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்
x
தினத்தந்தி 5 May 2020 12:30 AM IST (Updated: 5 May 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை 4.30 மணியளவில் அங்குள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியது.

துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த மோதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story