டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டுக்குள் புகுந்து பா.ஜனதாவினர் தாக்குதல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் புகுந்து பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தியதாக, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசாங்கம் மாநகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்த கோரி தொடர் தர்ணா போராட்டம் நடத்தும் பா.ஜனதா அதிகாரம் செலுத்தும் மாநகராட்சிகளின் மேயர்களை கொலை செய்ய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான துர்கேஷ் பதக் ஆகியோர் சதி செய்வதாக டெல்லி போலீசில் நேற்று முன்தினம் பா.ஜனதா சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மணீஷ் சிசோடியாவை கண்டித்து பா.ஜனதாவினர் டெல்லியில் உள்ள அவரது வீட்டு அருகில் போராட்டம் நடத்தினார்கள். அந்த சமயத்தில் மணீஷ் சிசோடியா வீட்டில் இல்லை.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மணீஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டதாகவும் ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் காண்பித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
Related Tags :
Next Story