சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்


சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்
x
தினத்தந்தி 5 March 2021 4:55 AM IST (Updated: 5 March 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது அவர் பேசியதாவது;-

“நாடு சுதந்திரம் பெற்ற பின், அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் ராணுவம், இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய, மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில், 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். 

உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட, நம் ராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த, சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும். போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி, அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை, நாம் தெளிவாக கற்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story