கொரோனா பாதிப்பை கண்டறிய ஒரே நாளில் 19.20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய ஒரே நாளில் 19.20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், மேலும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,20,477 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 37,62,32,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story