10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி, 

ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணங்களை திருப்பித்தர மாநில தேர்வு வாரியங்களுக்கு உத்தரவிடக் கோரி உத்தரபிரதேச தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அந்தந்த மாநில தேர்வு வாரியங்கள் அனைத்து தயாாிப்புப் பணிகளையும் மேற்கொண்டன. கொரோனா பரவல் காரணமாக கடைசி கட்டத்தில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. எனவே, ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணங்களை திருப்பித்தர மாநில தேர்வு வாரியங்களுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டியதில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தது.

Next Story