ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவோம்- ராகுல் காந்தி வாக்குறுதி


ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவோம்- ராகுல் காந்தி வாக்குறுதி
x

விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி கூறினார்.

ஜெய்ப்பூர்:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அவ்வகையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும்.

விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story