பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்


பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்
x

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் முதல் மந்திரி நிதிஷ்குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இதுகுறித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலத்தின் 3 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், "மோசமான வானிலையில் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வப்போது பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். மோசமான வானிலையின் போது வீட்டிலேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story