கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை


கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் பீகார் தம்பதி வசித்து வருகின்றனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் சிலர் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கணவர் கண் முன்னே, மர்மநபர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி கூறி உள்ளனர். இல்லையென்றால் இருவரையும் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டி உள்ளனர். இதையடுத்து தம்பதி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

எனினும் மர்மநபர்கள் அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர். அதே சமயம் தம்பதி அங்கிருந்து விரைவாக ஓடி தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுபற்றி போலீசாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பின்னர் கொடிகேஹள்ளி போலீசில் தம்பதி இதுபற்றி புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story