எஸ்.சி, எஸ்.டி, பிரிவினரின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்குகிறது: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

எஸ்.சி, எஸ்.டி, பிரிவினரின்  ஆதார் அட்டைகளை மத்திய அரசு  முடக்குகிறது: மம்தா பானர்ஜி பகீர்  குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Feb 2024 12:07 PM GMT (Updated: 19 Feb 2024 12:45 PM GMT)

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

கொல்கத்தா,

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காள அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக எஸ்.சி, எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயலிழக்கச் செய்து வருகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

தனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களை பொது மக்கள் பெறாத வகையில், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டையை பா.ஜ.க. அரசு முடக்குவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஏன் பல ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டன? பெரும்பாலும் மாட்டுவா சமூகத்தினரின் ஆதார் அட்டைகள் செயலிழக்கப்பட்டுள்ளன. எஸ்டி மற்றும் சிறுபான்மையினரின் அட்டைகளும் செயலிழக்கப்படுகின்றன என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story