தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தொடர்பான தீர்ப்பு: "ஆபரேஷன் தாமரை"யின் தொடர்ச்சி - ஆம் ஆத்மி விமர்சனம்


தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தொடர்பான தீர்ப்பு: ஆபரேஷன் தாமரையின் தொடர்ச்சி - ஆம் ஆத்மி விமர்சனம்
x

பா.ஜனதா கட்சி ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் சட்டமன்ற உறுப்பிர்களை விலைக்கு வாங்கி, ஆளும் கட்சியில் பிளவை ஏற்படுத்தி அரசுகளை கவிழ்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இந்தநிலையில் சிவசேனா சின்னம் மற்றும் கட்சியின் பெயரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இது முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது 'ஆபரேஷன் தாமரை' திட்டத்தின் தொடர்ச்சி என ஆம் ஆத்மி விமர்ச்சித்து உள்ளது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் மும்பை தலைவர் ப்ரீத்தி சர்மா மேனன் நேற்று கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் பா.ஜனதாவுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்டுகின்றன. அதன் கலாசாரம் எந்த வகையிலாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதாகும்.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை கூண்டில் அடைந்த கிளி என்ற பழமொழியை விட மோசமானது. பா.ஜனதா கட்சி ஒவ்வொரு அரசு இயந்திரத்தை அழித்து அதை வெறும் பொம்மையாகவும், ரப்பர் ஸ்டாம்பாகவும் மாற்றிவிட்டன. இதற்கு தேர்தல் ஆணையமும் விதிவிலக்கில்லை. ஜனநாயக நாடாக நாம் பின் தங்கிவிட்டோம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஆபரேஷன் தாமரை நீட்டிப்பு ஆகும்.

இந்த ஆபத்தான செயல்கள் நமது அரசியலமைப்பு கூட்டாட்சியின் அடித்தளத்தையே தாக்குகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story