பா.ஜனதா எம்.எல்.சி.யின் கார் மோதி விவசாயி படுகாயம்

பா.ஜனதா எம்.எல்.சி.யின் கார் மோதி விவசாயி படுகாயம்
x

ஒசக்கோட்டை அருகே பா.ஜனதா எம்.எல்.சி.யின் கார் மோதி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் எம்.எல்.சி.யை பொதுமக்கள் கண்டித்தனர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.

கோலார் தங்கவயல்:

பா.ஜனதா எம்.எல்.சி.

கர்நாடக மாநில பா.ஜனதாவின் பொதுச் செயலாளரும், எம்.எல்.சி.யாக இருந்து வருபவர் ரவிக்குமார். இவர் நேற்று காரில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தார். ஒசக்கோட்டை தாலுகா சிவநாபுரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கோபால்(வயது 45) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.சி. ரவிக்குமாரின் கார் பயங்கரமாக மோதி உள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கோபால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ரவிக்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை பார்த்த அப்பகுதி பொது மக்கள், ரவிக்குமாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையாக திட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

டிரைவர் கைது

இதனால், அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒசக்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரின் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story