அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் மேலும் ஒரு கேவியட் மனு


அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் மேலும் ஒரு கேவியட் மனு
x

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.சண்முகம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், வேறு எவ்வித முடிவையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.சண்முகம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மேல்முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story