அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை


அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
x

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.

புதுடெல்லி,

சென்னை வானகரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8-ந் தேதி விசாரித்தது. பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.


Next Story