நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்...!!!


நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்...!!!
x

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

டெல்லி.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று வந்த அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசி இருந்தார். அதன்பின்னர் இன்று அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இதில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் போன்றவற்றைக் குறித்து விவாதித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் குறிப்பாக நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தக் கப்பல் சேவையின் தொடக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story