ஜம்மு-காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல்


ஜம்மு-காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல்
x

ஜம்மு-காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

2ம் கட்ட தேர்தலில் 27 லட்சத்து 78 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதேவேளை, வாக்களிக்க 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து எஞ்சிய 40 தொகுதிகளுக்கும் அடுத்தமாதம் 1ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்தமாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story