மணிப்பூர் கலவரம்; அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்


மணிப்பூர் கலவரம்; அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
x

மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று கூடுகிறது .

மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடை பெற்று வருகிறது .கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடருகிறது .இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது .இதில் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளிடம் கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .இக்கூட்டம் மதியம் 3 மணிக்கு கூடவுள்ளது .

இதுகுறித்து காங்கிரஸ் கூறியதாவது ,அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முடிவு "மிகவும் தாமதமானது" என்று கூறிய காங்கிரஸ், அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இல்லாத நேரத்தில் கூட்டத்தை நடத்துவதற்கான நடவடிக்கை, இந்த சம்பவங்கள் அவருக்கு முக்கியமில்லை என தோன்றுகிறது ,என கூறியது .


1 More update

Next Story