பீகாரில் டிராக்டர் - கார் மோதி விபத்து: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி


பீகாரில் டிராக்டர் - கார் மோதி விபத்து: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2024 6:41 AM GMT (Updated: 18 March 2024 8:08 AM GMT)

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு 10 பேர் காரில் அவர்களது வீட்டிற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் பஸ்ரஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரி கூறுகையில், " திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு திரும்பி கொண்டிருந்தவர்கள் பயணித்த காரும் அதிக பாரம் ஏற்றி வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரும் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்கள் கவுதம் தாக்கூர் (32), மோனு குமார் (7), அமன் குமார் (25), பண்டி குமார், அன்ஷு குமார் (23), பல்து தாக்கூர் (50), திலோ கிமார் (10), பிரகாஷ் சிங் மற்றும் தர்மேந்திர சர்மா என அடையாளம் தெரியவந்துள்ளது" என்றார்.


Next Story