'அரசியலை தொடர்ச்சியாக படுகொலை செய்யும் கட்சி பா.ஜ.க.' - சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்


அரசியலை தொடர்ச்சியாக படுகொலை செய்யும் கட்சி பா.ஜ.க. - சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்
x

பா.ஜ.க. குற்றங்களைச் செய்யும் வழிமுறைகள் முன்பு இருந்ததைப் போல் அப்படியே உள்ளது என்று சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அஜித் பவார் கிளர்ச்சியில் ஈடுபட்டு அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேருடன் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். பா.ஜ.க. கூட்டணி அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இதற்கு பின்னால் மத்திய அரசின் மூளையாக செயல்பட்டுள்ளது. அவர்கள் அரசியலை தொடர்ச்சியாக படுகொலை செய்பவர்கள். அரசியலை பலாத்காரம் செய்கிறார்கள். அவர்கள் குற்றங்களைச் செய்யும் வழிமுறைகள் முன்பு இருந்ததைப் போல் அப்படியே உள்ளது. தங்களின் சொந்த நலனுக்காக அவர்கள் அரசியல் கட்சிகளை உடைத்து, பிரிந்து வந்தவர்களை வைத்து கட்சிக்கான உரிமையைக் கோருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story