பாஜக ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தி வெறுப்பு, வன்முறையை பரப்புகிறது - ராகுல்காந்தி


பாஜக ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தி வெறுப்பு, வன்முறையை பரப்புகிறது - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 17 April 2023 9:52 AM GMT (Updated: 17 April 2023 9:56 AM GMT)

பாஜக ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தி வெறுப்பு, வன்முறையை பரப்புகிறது என்று ராகுல்காந்தி கூறினார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று கர்நாடகாவின் பிடர் மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.

ராகுல்காந்தி பேசுகையில்,

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனநாயகத்தை தாக்குகிறது. இவை வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை பரப்புகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்துஸ்தானில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்புகிறது. பாஜக ஏழைகள் மற்றும் நலிவடைந்தோரிடமிருந்து பணத்தை எடுத்து 2 அல்லது 3 பணக்காரர்களுக்கு கொடுக்கிறது' என்றார்.


Next Story