தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு


தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
x

3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை.

3 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீரை விநாடிக்கு 998 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், குறைவான அளவே திறக்கப்படுகிறது. இது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.



Next Story