டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்


டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து டெல்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து டெல்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.

மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. அதில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அகில இந்திய காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முகுல் வாஷ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மீதமுள்ள 100 தொகுதிகளில் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனை நடத்தினோம்

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டோம். மீதமுள்ள 100 தொகுதிகளில் வேட்பாளர்ளை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். சில தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை விரைவில் வெளியிடுவோம். அப்போது வேட்பாளர் விவரங்கள் உங்களுக்கு தெரியவரும்" என்றார்.


Next Story