உத்தர பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து செல்போனைத் திருடிய காவலர் சஸ்பெண்ட்


உத்தர பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து செல்போனைத் திருடிய காவலர் சஸ்பெண்ட்
x

செல்போனைத் திருடிவிட்டு காவலர் தப்பியோடும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சத்மாரா சந்திப்பு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கடைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து செல்போனைத் திருடியுள்ளனர். செல்போனைத் திருடிவிட்டு அவர்கள் தப்பியோடும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செல்போனைத் திருடிய காவலரின் பெயர் பிரகேஷ் சிங் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரகேஷ் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் இருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story