மும்பையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது


மும்பையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது
x

போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மற்றும் டோங்ரி ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும் போதைப்பொருளை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 4 பேர் மீது போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதன்படி கைது செய்யப்பட்ட பாஜித் அஸ்ரப்(21), ஹனிப் பூஜ்வாலா(35), இம்ரான் பாரூக் ஷேக்(38) மற்றும் ரியாஸ் எலியாஸ் ஷேக்(41) ஆகிய 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்து பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story