அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை
x

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு 22-ந் தேதி அரை நாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் அரைநாள் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்தநிலையில் நாளை (22-ந் தேதி) மதியம் 2.30 மணி வரை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று டெல்லி மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே டெல்லி அரசு அலுவலகங்கள், குடிமை அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்க டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story