யாரை பார்த்தும் எனக்கு பயமில்லை - சசிதரூர் அதிரடி


யாரை பார்த்தும் எனக்கு பயமில்லை - சசிதரூர் அதிரடி
x

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யான சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூனகார்வே தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவரானார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோதும் சசிதரூர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளாவில் நடைபெற்றபோது அந்த யாத்திரையில் சசிதரூர் பங்கேற்றார்.

இதனிடையே, சசிதரூர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மேலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இது கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மலப்புரம் மாவட்டம் பனக்காடு பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்களை சசிதரூர் இன்று சந்தித்தார்.

அப்போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து சசிதரூரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிதரூர், யாரை பார்த்தும் எனக்கு பயமில்லை அதேபோல், என்னை பார்த்தும் யாரும் பயப்படவேண்டாம்' என்றார்.


Next Story