இந்தியா 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை - மத்திய அரசு தகவல்


இந்தியா 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை - மத்திய அரசு தகவல்
x

இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை என மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:-

"ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம் ஆகும். சுமார் 4 கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லை.

மார்ச் 16 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story