அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை


அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை
x

மனிஸ் குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மனிஸ் குமார் (வயது 34). இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி அமெரிக்கா முழுவதும் வினியோகம் செய்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனிஸ் குமார் இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவர் இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் 3.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.28 கோடி) வரை வருவாய் ஈட்டினார்.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு மனிஸ் குமாரின் போதைப்பொருள் கடத்தல் அம்பலமானது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனிஸ் குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பாஸ்டன் நகர கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதன்படி மனிஸ் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.81 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story